நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை உயர்வு - புதிய விலை ரூ.5.25 ஆக நிர்ணயம்!
Sep 7, 2026, 09:05 IST
நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டைக்கான கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
சந்தையில் முட்டைகளுக்கான தேவை அதிகரித்ததைக் கருத்தில்கொண்டு, கடந்த 16 நாட்களுக்குப் பிறகு முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.25 என அதிகாரப்பூர்வமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
