நாமக்கல் கவிஞர் மகள் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்! இன்று இறுதிசடங்குகள்!

 
ராஜலட்சுமி

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருது’” என்கிற வரிகள் சுதந்திர தாகத்தையும், இந்தியர்களிடையே தாக்கத்தையும் ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. அந்த வரிகளுக்கு சொந்தக்காரரான கவிஞர் நாமக்கல் வெ. ராமலிங்கத்தின் மகள் காலமானார். இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டவர் ராமலிங்கனார்,நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கத்துக்கு  இவருக்கு இயல்பிலேயே இருந்த  சாந்த குணத்தால் முழு அகிம்சை வாதியாக வாழ்ந்து வந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பியதில் பெரும்பங்கு  ராமலிங்கனாரையே சாரும்.

ராமலிங்கம் பிள்ளை

இவர் மகாத்மா காந்தி குறித்து  எழுதிய பாடல் வரிகள் தாம் தமிழர்களை வீறுகொண்டு எழ வைத்தது. கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது… சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” என்று முழக்கத்தின் வரிகள் ராமலிங்கானாருடையது தான். இந்த வரிகளை பாடிக்கொண்டே சுதந்திரப் போராட்டத்தில் தம்மை இணைத்து கொண்டனர். 

அதில் நெஞ்சுரம் அடைந்து சுதந்திரப் போர்க்களம் நோக்கி நடக்கத் தொடங்கினர.  இவரது மகள் ராஜலட்சுமி. சென்னையில் வசித்து வந்த  ராஜலட்சுமி, நேற்று ஏப்ரல் 7ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு காலமானார். இவரது மறைவை அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்குகள் இன்று நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web