கலெக்டர் விவகாரத்தில் எம்எல்ஏ மீது சந்தேகம்… நாஞ்சில் சம்பத் கருத்தால் தவெகவில் பரபரப்பு!

 
அருள் விக்னேஷ்

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள சர்ச்சையில், தவெக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய நாஞ்சில் சம்பத், எம்எல்ஏ அருள் விக்னேஷ் அத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றே தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாகியிருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டால், அடித்தட்டு மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய்தான் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பரவும் தகவல்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வதந்தி என்றும் அவர் கூறியுள்ளார்.இந்தச் சூழலில், நாஞ்சில் சம்பத்தின் கருத்து கட்சிக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டு தொடர்பான உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுகளே தெளிவுபடுத்தும்.