நாமக்கல் நரசிம்மர் கோவிலில் பங்குனி திருத்தேர் விழா தொடக்கம்!

 
நரசிம்மர்

மிகவும் பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பங்குனி திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

தேர்த்திருவிழா

அதன்படி நிகழாண்டு பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. விழாவை ஒட்டி, வரும் 24–ஆம் தேதி, நரசிம்மர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனையடுத்து, 26–ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டமும், மாலை 4.30 மணியளவில் அரங்கநாதர், ஆஞ்சனேயர் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஏப்ரல் 1–ஆம் தேதி ஊஞ்சல் உற்சவ சேவையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 

நீட் தேர்வில் முதலிடம்! நாமக்கல் மாவட்டம் அசத்தல்!


பங்குனி திருத்தேர் பெருவிழா கொடியேற்ற விழாவில் அறங்காவலர் குழு தலைவர் நல்லசாமி மற்றும் அறங்காவலர்கள், உதவி ஆணையர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இரவு 8 மணியளவில் அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். முன்னதாக கொடியேற்ற விழாவுக்கு நாமக்கல் நகரைச்சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web