பூமியிலேயே செவ்வாய் கிரக வாழ்க்கை! 378 நாட்கள் தனிமையில் இருந்த 4 பேர் வெளியே வந்தனர்!

 
செவ்வாய் கிரகம்

 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நீண்டகாலம் தங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மேற்கொண்ட முக்கிய சோதனை நிறைவடைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தைப் போன்ற செயற்கை வாழ்விடத்தில் 378 நாட்கள் தங்கியிருந்த 4 பேர் பாதுகாப்பாக வெளியே வந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் 1,700 சதுர அடி பரப்பளவில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் இந்த வாழ்விடம் உருவாக்கப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி ராஸ் எல்டர், எல்லென் எல்லிஸ், மேத்யூ மாண்ட்கோமரி, ஜேம்ஸ் ஸ்பைசர் ஆகியோர் இந்தச் சோதனையில் பங்கேற்க உள்ளே சென்றனர்.

Crew from NASA's simulated Mars mission emerges after 378 days in isolation - CNA

குறைந்த அளவிலான உணவு, தண்ணீரைப் பயன்படுத்தி வாழ்வது, செவ்வாய் மண்ணைப் போன்ற அமைப்பில் பயிர்களை வளர்ப்பது, தாமதமான தகவல் தொடர்பைக் கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். தனிமை மற்றும் குறைந்த வளங்கள் போன்ற சவால்களையும் எதிர்கொண்டனர்.

அக்டோபர் 31-ம் தேதி 378 நாள் சோதனையை நிறைவு செய்து அவர்கள் வெளியே வந்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு அவர்களிடம் உடல்நலம் மற்றும் செயல்திறன் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆய்வின் தரவுகள் எதிர்கால நிலா மற்றும் செவ்வாய் பயணங்களுக்கான திட்டமிடலுக்கு உதவும் என நாசா தெரிவித்துள்ளது.