நாசாவின் 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கி விண்ணில் பாய்ந்தது!
Aug 30, 2026, 20:30 IST
நாசாவின் அதிநவீன 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளி தொலைநோக்கி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை விட சுமார் 100 மடங்கு பரந்த பார்வைத்திறன் கொண்டதாக இந்த அதிநவீனத் தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சுமார் 16 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சூரியன்-பூமி லெக்ராஞ்ச் புள்ளி (L2) பகுதியில் இது நிலைநிறுத்தப்பட உள்ளது.
பிரபஞ்சத்தின் ரகசியங்களான டார்க் எனர்ஜி, டார்க் மேட்டர் மற்றும் தொலைதூர விண்மீன் திரள்கள் குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் முக்கியப் பணியை இந்தத் தொலைநோக்கி மேற்கொள்ளவுள்ளது.
