சாக்குப்பையில் தெருநாய்! மாநகராட்சி அலுவலகத்தில் விட்ட மக்கள்... நாசிக்கில் பரபரப்பு

 
மகாராஷ்டிரா

 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக கூறி, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கண்டித்து யுவசேனா அமைப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக யுவசேனா தொண்டர்கள் சிலர், ஒரு தெருநாயை சாக்குப்பையில் அடைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அந்த நாயை மாநகராட்சி அதிகாரி ஒருவர் முன்னிலையில் அலுவலகத்திற்குள்ளேயே திறந்துவிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Nashik: Stray Dog Menace In Indiranagar–Ashok Nagar Sparks Fear, Residents Demand Urgent Action

நாசிக் நகரில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுவசேனா அமைப்பினர் வலியுறுத்தினர்.தெருநாய்கள் தொடர்பாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.