திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது... நத்தம் விசுவநாதன் பேச்சு!
திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
தூத்துக்குடியில் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அதிமுக கிளைக் கழகம், வார்டு, வட்ட கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு பொறுப்பாளர்கள் கழக துணை பொதுச் செயலாளரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பேசிய கழகத் துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன், “திமுகவின் பொய் பிரச்சாரத்தை புறந்தள்ளுங்கள் அதனை யாரும் நம்ப வேண்டாம் திமுக என்றாலே பொய் சொல்வது மட்டும் தான் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தது திமுக. திமுக ஆட்சி மீது மக்களிடம் கடுமையான அதிருப்தியில் உள்ளனர் இது வரும் தேர்தலில் எதிரொலிக்கும், அரசியலில் நிரந்தர தோல்வியும் கிடையாது நிரந்தர வெற்றியும் கிடையாது.

அதிமுக களத்தில் இல்லாதது போல் திமுக மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. 2026 நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் யார் களத்தில் இல்லை என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள், அது நமக்கான தேர்தல் 2026 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி , திமுகவின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது அந்த அளவு மக்கள் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
