பெரும் சோகம்... அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி... அதிபர் மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

 
புதின்

ரஷ்யாவில் மாஸ்கோவில் நடைபெற்ற  இசை கச்சேரியில் திடீரென பயங்கரவாதிகள் புகுந்தனர். அந்த அரங்கில் திடீர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 133 உயிரிழந்தனர். 153 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமானதாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.   இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதற்காக இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேரை ரஷ்ய காவல்துறை அதிரடியாக  கைது செய்துள்ளது.  

புதின்

இது குறித்து ரஷ்ய அதிபர் புதின்  ‘‘ துப்பாக்கிசூடு சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் உக்ரைன் எல்லை வழியாக தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டனர்’’ எனக் கூறியுள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் இச்சம்பவம் குறித்து “ இந்தக் கொடூரத்  தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்தான் காரணம். உக்ரைனுக்கு தொடர்பு இல்லை’’ என்றார். உக்ரைன் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவதற்காக புதினும், ரஷ்ய, அரசியல்வாதிகளும் தவறாக தொடர்புப்படுத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய செய்தி நிறுவனங்கள் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டவர்கள் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளன.  

புதின்

ரஷ்யாவை பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 5 வது முறையாக புதின் மீண்டும் வெற்றி பெற்று அதிபர் ஆகியுள்ளார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்த இந்நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் நாள் முழுவதும் அரைக் கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று ஒரு நாள் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.அதே போல்  உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதின் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார். இந்த தாக்குதல் பற்றி புதின்  தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பியோட முயற்சித்தனர் எனக் கூறியுள்ளார். ஆனால் இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web