சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசியக் கொடி விற்பனை!

 
தபால் அலுவலகங்கள்

இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக் கொடி விற்பனைக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாகத் தேசியக் கொடியைப் பெற்று ஏற்றி மகிழ இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று  75வது சுதந்திர தின விழா! தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு!

கிராமப்புற தபால் நிலையங்கள் உட்பட தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு தேசியக் கொடி 25 ரூபாய் என்ற மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகி மூவர்ணக் கொடியை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மோடி சுதந்திர குடியரசு

தேசியக் கொடிகள் மொத்தமாகத் தேவைப்படுவோர் 9841875710, 9791655030 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனத் தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.