SIR போராட்டத்தில் பெண்களிடம் பாலியல் வன்முறை - தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

 
SIR டெல்லி

டெல்லியில் நடைபெற்ற SIR போராட்டத்தின் போது பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறிய பாலியல் வன்முறை மற்றும் காவல்துறையினரின் தாக்குதல்களைக் கண்டித்து, பல்வேறு மகளிர் அமைப்புகள் டெல்லி காவல் துறை தலைமையகத்தை நோக்கி இன்று கண்டனப் 

டெல்லி

அகில இந்திய ஜனநாயக மகளிர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல முக்கிய மகளிர் அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கின. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீதும், உரிய பாதுகாப்பு வழங்கத் தவறியவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தீவிரமாக முழக்கமிட்டனர். டெல்லி காவல் துறை தலைமையகத்தை முற்றுகையிடும் நோக்கில் திரண்ட இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

டெல்லி பத்திரிக்கையாளர் போராட்டம்

இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், போராட்டத்தின் போது பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல் துறை ஆணையருக்கு NHRC நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.