தேசிய ஸ்குவாஷ் போட்டி: தமிழக வீரர் அபய் சிங் 3-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

 
ஸ்குவாஷ்

 

மும்பையில் நடைபெற்ற 82-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் அபய் சிங் 3-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதி ஆட்டத்தில் மும்பையின் வீர் சோத்ரானியை 11-6, 11-4, 11-9 என்ற நேர் செட்டில் வீழ்த்தி அவர் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Abhay Singh, Akanksha Salunkhe emerge as National squash champions

பெண்கள் பிரிவின் இறுதிச் சுற்றில் கோவாவைச் சேர்ந்த ஆகாங்ஷா சலுன்கே, தமிழக வீராங்கனை ஷமீனா ரியாசை 11-6, 11-4, 11-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி முதல் முறையாகத் தேசியப் பட்டத்தை வென்றார்.

Abhay Singh, Akanksha Salunkhe emerge as National squash champions

காயம் காரணமாக 6 வாரங்கள் ஓய்வில் இருந்ததாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது காயத்துடன் விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றதாகவும் அபய் சிங் தெரிவித்துள்ளார்.தமிழக வீரர் அபய் சிங்கின் இந்தச் சாதனைக்கு விளையாட்டுத் துறையினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.