நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

 
சானிட்டரி நாப்கின்

போன தலைமுறை வரை  பெண்களுக்கு மாத விலக்கு 15 வயதில் தான் தொடங்கும் . ஆனால் இன்றைய இளம் பிள்ளைகளுக்கு 10 வயது முதல் மாதவிலக்கு சுழற்சி ஆரம்பித்து விடுகிறது. 10 வயது தொடங்கி 50 வயது வரை முழு 40 வருடங்கள் இதனால் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழைய துணிகளை வைத்து திரிந்த  பெண்கள் சுகாதாரம் என்ற பெயரில் நாப்கின்களை பயன்படுத்தி வருகின்றனர். 

 மாதவிலக்கு  என்பது பெண்களுக்கு அசவுகரியமான விஷயம். எவ்வளவு திறமைசாலிகளாக, மன வலிமை கொண்டவர்களாக இருந்தாலும் அந்த நாட்களில் சற்று சோர்ந்துவிடுவார்கள். மாதந்தோறும் கடந்து செல்ல வேண்டிய கடினமான நாட்களாக மாதவிடாய் அமைந்திருக்கிறது. 

இந்த சமயத்தில் நீங்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினால் சிராய்ப்புகள் ஏற்படும். அதை வேறு சமாளித்தாக வேண்டும். இந்த நாப்கின்களில் உள்ள ரசாயனங்கள் உங்கள் பிறப்புறுப்பின் தோல் மற்றும் தொடைகளில் எரிச்சலை ஏற்படுத்தும். அரிப்பு மற்றும் ஈரப்பதத்தால் இந்த எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வாசனை மிகுந்த நாப்கின் பேடுகளும் கூட சரும அலர்ஜியை உருவாக்கும்.

Sanitary Napkin

இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, வேறு பிராண்ட் பேடுகளை அல்லது காட்டன் பேடுகளை பயன்படுத்த வேண்டும். மாதவிடாய் சமயத்தில் நாப்கின் பேடுகளால் ஏற்படும் எரிச்சலை வீட்டு வைத்தியத்தின் மூலமே சரியாக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையால், நாப்கினால் ஏற்படும் அரிப்புக்கு இது சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. இது உங்கள் சருமத்தை ஈரப்படுத்தும். இரவு தூங்குவதற்கு முன், குளிர்ந்த நீரை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யுங்கள். அதன்பிறகு அப்பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் குளித்த பிறகும் இதைப் பயன்படுத்தலாம்.

Coconut Oil

வேம்பு இலை

வேம்பு எண்ணெய் தலைமுடிக்கும் சரும நலனுக்கும் மிகவும் நல்லது. இதிலுள்ள ஆண்டி ஆக்ஸ்டெண்டுகள் மற்றும் அழற்சி நீக்கி பண்புகள், நாப்கினால் ஏற்படும் அரிப்பிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. பாத்திரத்தில் நீரை கொதிக்க விடுங்கள். அதில் 20 வேம்பு இலையை சேருங்கள். இலையில் உள்ள சாறெல்லாம் நன்றாக இறங்கட்டும். அதன்பிறகு அடுப்பிலிருந்த நீரை எடுத்து குளிர வையுங்கள். அறை வெப்பநிலைக்கு வேப்பஞ்சாறு வந்ததும், இதை வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நன்றாக கழுவுங்கள். இவற்றோடு கூடுதலாக தண்ணீர் சேர்த்து குளிக்கவும் செய்யலாம். வேம்பு இலை நமது சருமத்திற்கு மிகவும் நல்லது.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர் அரிப்பு ஏற்படுவதைக் குறைக்கும். கொஞ்சமாக ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பஞ்சை நனைத்து சிராய்ப்புகளில் ஒத்தடம் கொடுங்கள். காயும் வரை அப்படியே வைத்திருங்கள். தினமும் இதேப்போல் மூன்று முறை செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Apple Cider Vinegar

ஐஸ்

வலியையும் வீக்கத்தையும் ஐஸ் குறைக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சில ஐஸ் கட்டிகளை எடுத்து, அதை துணியில் கட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்வதால் நரம்பு முனைகள் உணர்வற்று, உங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.

மாதவிடாய் சமயத்தில் செயற்கை இழையால் நெய்யப்பட்ட ஆடைகளையோ அல்லது இறுக்கமான ஆடைகளையோ அணிந்தால் சிராய்ப்புகள் அதிகமாகிவிடும். ஆகவே இதுபோன்ற ஆடைகளை அணியாதீர்கள். மென்சுரல் கப், காட்டன் பேடுகள் போன்றவற்றையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

From around the web