திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலம் - அனுமன், யானை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா!

 
திருப்பதி பிரம்மோற்சவம் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான நேற்று, மலையப்பசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

திருப்பதி பிரம்மோற்சவம்

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று, பகலில் கோதண்டராமர் திருவுருவ அலங்காரத்தில் அனுமன் வாகனத்திலும், இரவில் யானை வாகனத்திலும் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திருமலையின் நான்கு மாடவீதிகளிலும் உலா வந்த சாமியைத் திரளான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

திருப்பதி பிரம்மோற்சவம்

இந்த ஆன்மீக வைபவத்தின் சிறப்பைத் கூட்டும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 516 கலைஞர்கள் பங்கேற்றுத் தங்களது பாரம்பரிய நடனங்களை வழங்கி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தனர். விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.