நாடு முழுவதும் களைக்கட்டிய நவராத்திரி திருவிழா... ரூ.5 கோடி மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் தோரணங்கள், மாலைகள் என அலங்கரிக்கப்பட்டுள்ள விசேஷ ஆலயம்!

 
தோரணங்கள், அலங்கார வளைவுகள், மாலைகள் அனைத்தும் ரூபாய் நோட்டுக்கள்! அதிசய கோவில்!

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் தசரா கோலாகல கொண்டாட்டமாக இருக்கும் . அதிலும் அம்மன் கோவில்களில் நிரம்பவே விசேஷம். 

தோரணங்கள், அலங்கார வளைவுகள், மாலைகள் அனைத்தும் ரூபாய் நோட்டுக்கள்! அதிசய கோவில்!

அந்த வகையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் தசராவை முன்னிட்டு சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பணத்தை பயன்படுத்தி அம்மன் மற்றும் கோயிலை அலங்கரித்துள்ளனர்.

அதே போன்று நெல்லூரில் உள்ள ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் புத்தம் புதிய நோட்டுகளைப் பயன்படுத்தி அம்மனையும், சந்நிதி உள்ளிட்ட பிற இடங்களையும் அலங்கரித்துள்ளனர்.

தோரணங்கள், அலங்கார வளைவுகள், மாலைகள் அனைத்தும் ரூபாய் நோட்டுக்கள்! அதிசய கோவில்!

வாயிற்படி முதல் கர்ப்பக்கிரகம் வரை 500, 200, 100, 50, 20 ரூபாய் நோட்டுகளாலேயே தோரணங்களும், அலங்கார வளைவுகளும் , மாலைகளும் செய்யப்பட்டிருந்தது காண்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. கோயிலில் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்திருந்ததால் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.