நவராத்திரி கொலு, கலசம் வைக்க உகந்த நேரம், வழிபாட்டு முறைகள்!

 
கலசம் வரலட்சுமி பூஜை விரதம்

புனிதமான நவராத்திரி திருவிழா ஆன்மிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகிய மும்மூர்த்திகளைப் போற்றும் இக்காலத்தில் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது நம் மரபு. இந்த ஆண்டிற்கான நவராத்திரி நாட்களில் கலசம் மற்றும் கொலு வைப்பதற்குரிய நல்ல நேரங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்துக் காணலாம்.

நவராத்திரி முதல் நாளான இன்று காலை சுபவேளையில் கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து, கலசம் ஸ்தாபனம் செய்வது உகந்தது. குறிப்பாக, ராகு காலம் மற்றும் எமகண்டம் போன்ற வேளைகளைத் தவிர்த்துவிட்டு காலை வேளையில் கலசம் வைப்பது மங்களகரமானது.

கொலு

வீட்டின் பூஜையறையில் அல்லது கொலு படியின் அருகில் மாக்கோலமிட்டு, வாழை இலை பரப்பி, அதில் அரிவி அல்லது நெல் நிரப்பி செம்பு அல்லது மண் கலசத்தை வைக்க வேண்டும். அதில் சுத்தமான நீர், நவதானியங்கள், பச்சிலை, மா இலைகள் மற்றும் தேங்காய் வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும்.

வழக்கமாக ஒன்பது படிகள் அல்லது மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொலு படிகளை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும். முதலாம் நாளில் கலைமகளுக்குரிய பூஜையுடன் தொடங்குவது சிறப்பு.

ஒன்பது நாட்களும் அம்மனுக்குரிய பிரசாதங்களைப் படைத்து, தினமும் மாலை வேளையில் விளக்கேற்றி பஜனை அல்லது லலிதா சகஸ் நாமம் பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

நவராத்திரி

ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை சரஸ்வதி தேவியை மூலமாக வைத்து புத்தகங்கள், கருவிகள் மற்றும் தொழில்துறைப் பொருட்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

ஒன்பது நாட்கள் வழிபாட்டிற்குப் பிறகு, பத்தாம் நாளான விஜய தசமியன்று கலச நீரை வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் தெளித்து, கொலு பொம்மைகளை மறுநாள் மீண்டும் பாதுகாப்பாக எடுத்து வைப்பதன் மூலம் நவராத்திரி விழா நிறைவடைகிறது.