நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை.. 8 பேரை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை.. சத்தீஸ்கரில் பெரும் பதற்றம்!

 
சத்தீஸ்கர் நக்சலைட்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 8 நக்சலைட்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து ஐஜி (பஸ்தர் பகுதி) சுந்தர்ராஜ் கூறுகையில், "கங்களூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லெந்த்ரா கிராமம் வனப்பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி. படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவு கோப்ரா இந்த கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டன.துப்பாக்கிச்சூட்டிற்கு பின், 4 நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் ஒரு எல்எம்ஜி மற்றும் பிற ஆயுதங்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.இதையடுத்து, மேலும் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டைகள் தொடர்கின்றனர்,'' என்றார்.

தாக்குதல் நடந்த பிஜப்பூர் மாவட்டம், பஸ்தர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக இதே பிஜாப்பூரில் கடந்த மார்ச் 27ம் தேதி நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.இன்றைய துப்பாக்கிச் சூடு சம்பவம் உட்பட இந்த ஆண்டு இதுவரை 41 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web