என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் சுட்டுக் கொலை!

சத்தீஷ்கார் மாநிலத்தில் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்று இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.
இந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில் தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் அடக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த என்கவுண்ட்டரின் போது பாதுகாப்புப்படை வீரர் படுகாயம் அடைந்தார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!