அதிர்ச்சியில் நயன்... கெத்து காட்டிய த்ரிஷா!
கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வந்த நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தில் நடிகை த்ரிஷா உள்ளார் என்ற தகவல் த்ரிஷா ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் நடிகைகளின் சம்பளம் கோடிகளில் எகிறிக் கொண்டிருப்பதால் தயாரிப்பாளர்கள் கதறுகிறார்கள்.
ஹீரோக்களைப் போலவே ஹீரோயின்களின் சம்பளம் விவகாரமும் யார் முதலிடம் என்ற விஷயமும் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் விவாதமாகும். அந்த வகையில் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாராவை சம்பள விவகாரத்தில் நடிகை த்ரிஷா முந்தியுள்ளார் என்ற விஷயம் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. சினிமாவின் ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த த்ரிஷா அதன் பிறகு கமர்ஷியல் நாயகியாக அறியப்பட்டார்.
ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும் சினிமாவில் தனக்கான இடத்தை இரண்டாவது இன்னிங்ஸில் இருந்துதான் வலுப்படுத்த ஆரம்பித்தார் த்ரிஷா. அதற்கு விஜய்சேதுபதியுடன் அவர் நடித்த ‘96’ திரைப்படம் முக்கிய பங்கு வகித்தது.
அதன் பிறகு வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் அவரை இந்திய அளவில் எல்லோருக்கும் பிடித்த நடிகையாக மாற்றியது. குந்தவையாக தனது அழகாலும் திறமையான நடிப்பாலும் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த த்ரிஷாவை ரசிகர்கள் அப்படிக் கொண்டாடினார்கள். சமீபத்தில் நடந்த ‘லியோ’ வெற்றி விழாவில் கூட ‘20 வருடம் கதாநாயகியாக நீடிப்பது சாதாரணமல்ல’ என த்ரிஷாவை வாழ்த்தினார் விஜய். 40 வயதிலும் அழகேறிக் கொண்டே இருக்கும் த்ரிஷாவுக்கு ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’, ‘ராங்கி’ என அடுத்தடுத்தப் படங்களும் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது. ஹீரோக்களுடன் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியவர் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் ஜொலிக்கவும் தவறவில்லை. இதன் காரணமாகவே கோலிவுட்டில் த்ரிஷா அலை மீண்டும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது.
கமல்-மணி ரத்னம் என்ற சினிமா ஜாம்பவான்களுடன் மூன்றாவது முறையாக ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதுமட்டுமல்லாது, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திலும் த்ரிஷா தான் கதாநாயகி. இப்படி தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களுடன் கைக்கோத்து ஹிட் கொடுப்பவரின் சம்பளம் தாறுமாறாக தற்போது உயர்ந்துள்ளது. முன்பு கோலிவுட்டில் ஒரு படத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்தார். ஆனால், தற்போது ‘பொன்னியின் செல்வன்’, படங்களின் வெற்றிக்குப் பிறகு ‘தக் லைஃப்’, ‘விடாமுயற்சி’ ஆகிய படங்களில் த்ரிஷா தனது சம்பளத்தை 12 கோடி ரூபாயாக உயர்த்தி நயனை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்படும் படங்கள் வசூலில் மண்ணைக் கவ்வி வருகின்ற நிலையிலும், பிரபல நடிகர், நடிகைகள் மெகா பட்ஜெட், பான் இந்தியா படங்கள் என்று முக்கியத்துவம் தந்து, படங்களைத் தேர்வு செய்து வருவது திரைத்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அழகல்ல என்று புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!