லவ் யூ உயிரே, உலகே.. .வைரலாகும் நயன்தாராவின் காதலர் தின இன்ஸ்டா பதிவு!

 
nayan

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி நடிகை நயன்தாரா  லேடி சூப்பர் ஸடாராக  தம்மை உயர்த்திக் கொண்டவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 75 வது படமான அந்த படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புக்களை வைத்திருந்தார் நயன்.   தற்போது மண்ணாங்கட்டி உட்பட பல  படங்களில் நடித்துவருகிறார். நயன்தாரா  தனது தனிப்பட்ட வாழ்வில் அடுத்தடுத்து பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்து  தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார்.  

சமீபமாக கதாநாயகி சம்பந்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  நானும் ரௌடிதான், அறம் 2 படங்களுமே    நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படத்திற்கு பிறகு ரசிகர்கள் அவரை   லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.   அதன்பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்.  திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடும் திரையுலகில் நடிகை நயன் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.   அந்தவகையில் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார்  அவர் பிஸியாக படங்களில் நடித்துவந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருக்கிறார்.

nayan

அதிலும் தனது மகன்கள் மீது ரொம்பவே பிரியமாக இருக்கிறார்.  அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.  சமீபத்தில்கூட கார் ஒன்றில் தனது இரண்டு மகன்களில் ஒரு மகனை கையில் ஏந்தியபடி இருந்தார்.  இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எல்லோரும் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.  நடிகை நயன்  தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை தன் இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயிரே, உலகே என  2   மகன்களுக்கும் வாஞ்சையோடு முத்தம் கொடுக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web