உயிர், உலக்கை மடியில் சாய்த்து தாய்ப் பாசத்தை பொழியும் நயன்... வைரல் போட்டோஸ்!
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. மலையாள சேனல் ஒன்றில் தொகுப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி படிப்படியாக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகை நயன் . தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றங்கள், இறக்கங்கள் இருந்தபோதிலும் தன்னுடைய கேரியரை எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர்.
நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தில் தமிழில் அறிமுகமாகி ரஜினி, சூர்யா, விஜய், அஜீத் என முண்ணனி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். இவருடைய மேனரிசம், நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விக்னேஷ் சிவனும் நயனும் உருகி... உருகி... காதலித்து வந்த நிலையில் அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணமான 4 மாதத்தில் சரகேசி முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன், குடும்பம், குழந்தை, கேரியர் என மூன்றையும் பேலன்ஸ் செய்து வருகிறார். தற்போது 'ஜவான்' படத்தின் மூலம் ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அடுத்தடுத்து சில பாலிவுட் படங்களில் கமிட்டாகி உள்ளார். தமிழில் மண்ணாங்கட்டி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
அதே போல் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் நாப்கின், ஸ்டாட்டர், லிப் பாம், பர்பியூம், என பல தரப்பட்ட பிசினஸ்களிலும் இறங்கியுள்ளார். தற்போது விக்கி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு சென்று வீடு திரும்புகிறேன் என கூறி... உயிர் - உலகத்தை பார்க்க போகிறேன் என கூறி சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.இதில் ஒரு புகைப்படத்தில் தன்னுடைய இரட்டை குழந்தைகளை விக்கி கொஞ்சும் நிலையில், மற்ற புகைப்படங்களில் நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை கொஞ்சி கொண்டும், மார்போடு அணைத்த படியும் இருக்கும் புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!