காளிகாம்பாள் கோவிலில் நயன்தாரா சிறப்பு வழிபாடு... வைரல் வீடியோ!

 
நயன்

 

நடிகை நயன்தாரா, சென்னை பாரிமுனையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள தனது புதிய திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக அவர் இந்த வழிபாட்டில் பங்கேற்றார்.

கோவிலில் காளிகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்து நயன்தாரா பிரார்த்தனை மேற்கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்ததுடன், பிரசாதங்களும் வழங்கினர்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் ஊர்வசி, குஷ்பு, சினேகா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

பட வெளியீட்டுக்கு முன்பாக நயன்தாரா கோவிலில் வழிபாடு செய்த நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.