திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
மருத்துவமனையில் நயன்தாரா
பிரபல நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர், தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகளும் உண்டு. சமீபத்தில் தான் தனது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். மேலும், அவர்களுக்காக பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்தும் வருகிறார்.

என்னது.. நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா.! ஏன்? என்னாச்சு?  வெளிவந்த தகவல்!! - Tamil Spark

இப்படியான நிலையில், நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன்தாராவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்ததாகவும், இதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமீறல் இல்லை" - என்ன  சொல்கிறது அறிக்கை? - BBC News தமிழ்

எனினும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து இது தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web