பெங்களூரு அருகே.. காதலர்களுக்கிடையே தகராறு... 9-ம் வகுப்பு மாணவியைக் கொன்று புதைத்த 16 வயது காதலன்!

 
கொலை

பெங்களூரு அருகே இன்ஸ்டாகிராம் சாட்டிங் செய்ததில் ஏற்பட்ட சந்தேகத்தால், 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை அவளது 16 வயது காதலன் நாட்டுத் துப்பாக்கியால் முகத்தில் சுட்டு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. கொலையை மறைப்பதற்காகச் சிறுமியின் உடலைத் தோட்டத்தில் புதைத்த காதலன், அவனது அண்ணன் மற்றும் மாமா உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு சாத்தனுர் அடுத்துள்ள வெங்கடராயதொட்டி பகுதியைச் சேர்ந்த அந்தச் சிறுமி, 9-ஆம் வகுப்புடன் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு வீட்டிலிருந்துள்ளார். இவருக்கும் கெம்பலநாதா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தினக்கூலித் தொழிலாளிக்கும் சமூக வலைதளம்  மூலமாகப் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது.

பெற்றோருக்குத் தெரியாமல் காதலனுடன் வசிப்பதற்காக, தனது தோழி வீட்டில் தங்கியிருப்பதாகப் பெற்றோரிடம் பொய் கூறிவிட்டு, காதலனின் வீட்டிற்கு அருகிலேயே தனியாக அறை எடுத்து அந்தச் சிறுமி தங்கி வந்துள்ளார். கடந்த ஜூலை 10-ம் தேதியன்று, காதலன் அந்தச் சிறுமியின் மொபைல் போனைச் சோதித்த போது, அவள் இன்ஸ்டாகிராமில் வேறொரு சிறுவனுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பதைப் பார்த்துள்ளான். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

காதலன் ஆணவக்கொலை கெளரவக்கொலை கொலை காதல்

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற 16 வயது சிறுவன், தனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவனது தாத்தாவின் பழைய வேட்டை நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வந்து, சிறுமியின் முகத்தை நோக்கியே நேராகச் சுட்டுள்ளான். இதில் முகம் சிதைந்து அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தாள்.

கொலை செய்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இக்குற்றத்தை மறைப்பதற்காகத் தனது அண்ணன் புட்டமடா (19) மற்றும் மாமா ஹரிஷ் (40) ஆகியோரைச் சிறுவன் உதவிக்கு அழைத்துள்ளான். மூவரும் சேர்ந்து நள்ளிரவில் சிறுமியின் உடலைத் தங்களது விவசாய நிலத்திற்கு எடுத்துச் சென்று ரகசியமாகப் புதைத்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் நடமாடி வந்துள்ளனர்.

மறுபுறம், பல நாட்களாகியும் மகள் வீட்டிற்கு வராததாலும், தோழியின் வீட்டிலும் இல்லாததாலும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சாத்தனுர் காவல் நிலையத்தில் தங்களது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.

காதல் காதலர்கள் பூங்கா கோவை கேக் மாஸ்டர்

புகாரின் பேரில் தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலை நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று கெம்பலநாதா கிராமத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய அந்தச் சிறுவனின் வீட்டிற்குச் சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் அதிரடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய சிறுவன், இறுதியில் இன்ஸ்டாகிராம் தகராறில் சிறுமியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று புதைத்த அதிர்ச்சி உண்மையை ஒப்புக் கொண்டான்.

இதனைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், கொலை செய்த 16 வயது சிறுவன், அவனுக்கு உடந்தையாக இருந்த அவனது அண்ணன் புட்டமடா மற்றும் மாமா ஹரிஷ் ஆகிய மூவரையும் முறைப்படி வழக்குப் பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.