“சொத்துக்களைக் குவிக்கும் நீசபங்க ராஜயோகம்”.. எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு!

 
நீசபங்க ராஜயோகம்

சக்திவாய்ந்த யோகங்களில் நீசபங்க ராஜயோகம் முக்கியமானது. ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்களின் நிலையைப் பொறுத்து உருவாகும் இந்த யோகம், சாதாரண நிலையில் உள்ள ஒருவரை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் வல்லமை கொண்டது.

நீசம் என்றால் பலவீனம் அல்லது பலம்குன்றிய நிலை என்று பொருள். பங்கம் என்றால் அந்த பலவீனமானது அடிபட்டுப் போவது அல்லது இல்லாமல் செய்யப்படுவது என்று அர்த்தமாகும். அதாவது ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் தனது நீச வீட்டில் (பலவீனமான வீட்டில்) அமர்ந்திருந்தாலும், அதற்கான சில குறிப்பிட்ட விதிவிலக்குகள் மூலம் அந்த நீசத் தன்மை விலகி, அதுவே ஒரு ராஜயோகமாக மாறிச் செயல்படுவதைத்தான் நீசபங்க ராஜயோகம் என்கிறோம்.

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

நீசபங்க ராஜயோகம் ஒருவரின் ஜாதகத்தில் முழுமையாக அமையும் பட்சத்தில் கிடைக்கும் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் கடுமையான போராட்டங்களையும் தடைகளையும் சந்தித்து வந்த நபர்களுக்கு, இந்த யோகத்தின் தாக்கம் ஏற்படும் காலத்தில் திடீர் திருப்பமும் எதிர்பாராத மிகப்பெரிய வளர்ச்சியும் ஏற்படும். அடிமட்ட நிலையில் இருந்து சமூகத்தில் உன்னதமான உயர்ந்த இடத்திற்கு வர இந்த யோகம் பெரிதும் உதவுகிறது.

தொழில் மற்றும் வணிகத் துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பெரும் லாபத்தைத் தரும். பல வருடங்களாகத் தொடர்ந்த நஷ்டங்கள் நீங்கி, புதிய உச்சத்தைத் தொடுவார்கள். அரசு வேலை, அரசியலில் உயர்ந்த பதவிகள், பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரப் பொறுப்புகள் போன்ற அதிகாரமிக்க பதவிகளை அடைவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்குள் உருவாகும்.

பொருளாதார ரீதியில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் சேருவது, புதிய வாகனங்கள் வாங்குவது மற்றும் பல வழிகளில் செல்வம் பெருகும் யோகம் உண்டாகும். சமுதாலத்தில் இவர்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். மற்றவர்களால் மதிக்கப்படும் கௌரவமான அந்தஸ்தைப் பெறுவார்கள்.

கஜகேசரி யோகம் ராசி ராசிபலன் ஜோதிடம்

எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் மன தைரியமும் உறுதியும் இவர்களுக்குக் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் திறனும், சவால்களைச் சாதகமாக மாற்றும் ஆளுமைத் திறனும் இவர்களிடம் மேலோங்கி நிற்கும்.

எனினும், இந்த யோகத்தின் முழுமையான பலன்கள் ஒருவரின் ஜாதகத்தில் அந்தந்தக் கிரகங்களின் தசா புக்தி காலங்கள் மற்றும் லக்னத்தின் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தே முழுமையாக நிர்ணயிக்கப்படுகின்றன. உங்கள் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் பலவீனமான இடத்தில் அமர்ந்திருக்கின்றன என்று சரிபார்த்து கொள்ளுங்கள். அதற்கேற்ப உங்களுக்கு நீசபங்க ராஜயோகம் இருந்தால் வாழ்க்கையின் பிற்பகுதியில் வெற்றி நிச்சயம் வந்து சேரும்.