நீட் தேர்வில் புதிய சாதனை - நாடு முழுவதும் 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்! மே 3-ல் நுழைவுத் தேர்வு!

 
நீட் நுழைவுத்  தேர்வு நீட் நுழைவுத்  தேர்வு

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 'நீட்' (NEET-UG) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பப் பதிவு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவு மார்ச் 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தேசிய தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி நடப்பு ஆண்டு (2026) 26 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

 நீட் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

கடந்த 2024-ல் 24.06 லட்சம் பேரும், 2025-ல் 22.76 லட்சம் பேரும் விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 3.24 லட்சம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் கனவுடன் காத்திருக்கும் மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது: மே 3ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை.

இந்தியா முழுவதும் மொத்தம் 552 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட 30 முக்கிய நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு காவலர் கேட் ஜேஇஇ நீட் மாணவி மாணவர்கள்

வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்காகத் துபாய், அபுதாபி, சிங்கப்பூர் என 16 வெளிநாட்டு நகரங்களிலும் தேர்வு நடைபெற உள்ளது. தற்போது விண்ணப்பங்களைச் சரிபார்க்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

ஏப்ரல் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (exams.nta.ac.in/NEET) ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தற்போது மாதிரித் தேர்வுகளில் (Mock Tests) அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர்.