நீட் போராட்ட வழக்கு... வழக்கறிஞர் கபில் சிபில் ரூ.1 கோடி நிதியுதவி - கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் ஆலோசனை!
டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

டெல்லி மாணவர் போராட்ட வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வது குறித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை நேரில் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
அமைதியான முறையில் உரிமைகளுக்காகப் போராடிய மாணவர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு எதிராகச் வலுவான சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீதான வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தேவையான சட்டப் பாதுகாப்புகளை வழங்கவும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ரூ.1 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அமைப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
