நாளை 1563 மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு!
இந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இம்மாத தொடக்கத்தில் வெளியாகின. இதில் நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என தொடர் புகார்கள் வந்தன. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி 1,563 மாணவர்களுக்கு நாளை ஜூன் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியான நிலையில் இதில் ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையான நிலையில் மறுதேர்வு அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார்கள் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை முற்றிலும் மறுத்தது. தேர்வு முடிவுகளை பொறுத்தவரை ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை உருவாக்கியது.

இது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு 23ம் தேதி மறுதேர்வு நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவு தேர்வுகளில் முறைகேடுகள் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டணை, அத்துடன் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
