இன்று நீட் மறுதேர்வு... மாணவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்!
இன்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணியளவில் சின்னசேலம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மதியத்திற்குள் சேலம் ரயில் நிலையத்தைச் சென்றடையும் வகையிலும். இன்று காலை 7:45 மணியளவில் திருப்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சேலத்தை நோக்கி விரைந்து சென்று சேரும் வகையிலும் இயக்கப்பட உள்ளது.

இந்தச் சிறப்பு ரயில்கள் அனைத்தும் முக்கியத் தாலுகா மற்றும் கிராமப்புற ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டைக் காட்டி, இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், பதற்றமின்றி தேர்வு மையங்களை அடைய இந்தத் தொடர்வண்டிச் சேவை மாணவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
