நெல்லை, தென்காசியில் மர்ம காய்ச்சல் அச்சம்... 350-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

 
காய்ச்சல்

 

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர்.

Mysterious fever' grips village in Karnataka's Koppal, officials say outbreak under control

இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 105 பெரியவர்களும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் 74 குழந்தைகள், 86 பெரியவர்கள் என பலர் சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Mysterious fever claims 84 lives in 7 districts of UP

நாங்குநேரி, அம்பை, வள்ளியூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கும் முகாம்களும் செயல்படுத்தப்படுகின்றன