முதலமைச்சர் புகைப்படம் புறக்கணிப்பு விவகாரம்... நெல்லை மேயரின் பரபரப்பு நடவடிக்கை!
நெல்லை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்திற்கு கீழே அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென மாற்றியுள்ளார். இத்தனை வருடங்களாக மேயருக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த முதன்மை இருக்கைக்கு பின்புறம் தற்போதைய தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அந்த முதன்மை இருக்கையில் அமர்ந்து கோப்புகளைக் கவனிப்பதைத் தவிர்த்து, மேயர் ராமகிருஷ்ணன் தனது இருக்கையை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தின் கீழ் மாற்றியமைத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. தற்போதைய முதலமைச்சரின் புகைப்படத்திற்கு கீழ் பணியாற்ற மனமில்லாமல் அவர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென அரங்கேறியுள்ள இந்த இருக்கை மாற்ற நடவடிக்கை நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு முறைப்படி அமைந்துள்ள முதலமைச்சரின் புகைப்படத்தை நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் இவ்வாறு புறக்கணித்துள்ள விவகாரம் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
