ரூ5 லட்சம் பண மோசடி... நெல்லையில் 2 இளம்பெண்கள் கைது... பரபரப்பு!
திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் பண மோசடியில் 2 இளம்பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டது திருநெல்வேலி அருகே உள்ள காரையிருப்பு பகுதியைச் சேர்ந்த சண்முகலட்சுமி மற்றும் பூரணசெல்வி ஆகிய 2 பேர் என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அந்த 2 இளம்பெண்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் மேலும் பலரிடம் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற முறையற்ற முதலீட்டுத் திட்டங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
