BREAKING... நெல்லையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை... மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Updated: Sep 8, 2026, 12:34 IST
நெல்லையில் 12ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் பதினாறு வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று சிலர் கொடூரமான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் சின்னக்குட்டி என்பவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. மேலும் முனீஸ்வரன் என்பவருக்கு பதிமூன்று ஆண்டுகளும், முருகேசன் என்பருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் போக்சோ நீதிமன்றம் இந்த பரபரப்பான தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
