மகளின் கண் முன்னே திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக் கொலை... நெல்லையில் பரபரப்பு!

 
நெல்லை

 

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வந்த உரிமையாளர் கண்ணன் (52), தனது மகளை டியூஷனில் இருந்து அழைத்து வருவதற்காகச் சென்றபோது, நால்வர் கொண்ட மர்மக் கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தந்தை தன் மகளின் கண் முன்னே கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்ட அந்த சிறுமி அலறித் துடித்து கதறியது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

இந்தச் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

கேமரா பதிவுகளின் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் இறங்கிய காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டுச் சம்பவம் நடைபெற்ற வெறும் 10 மணி நேரத்திற்குள் வெங்கடேஷ் மற்றும் சூர்யா இசக்கி ஆகிய இரண்டு முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைக் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் தகராறா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதமா என்பது குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.