நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அண்டை நாடுகளிலும் உணரப்பட்ட அதிர்வால் பரபரப்பு!
Nov 24, 2026, 10:10 IST
நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் அதிர்வுகள் இந்தியா, பூட்டான் மற்றும் சீனா ஆகிய அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜல்பைகுரி பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
