எவரெஸ்ட் மலைப்பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; வெளிநாட்டுப் பயணி பலி... அதிர்ச்சி வீடியோ!

 
ஹெலிகாப்டர்

 

நேபாளத்தின் எவரெஸ்ட் மலைப்பகுதியில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் இன்று (நவம்பர் 3) காலை இந்த விபத்து நிகழ்ந்தது. இரு வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வெளிநாட்டுப் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மற்றொரு பயணி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவ உதவி கிடைக்கச் செய்தனர். விபத்து எவ்வாறு நிகழ்ந்தது, ஹெலிகாப்டர்கள் மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவரெஸ்ட் மலைப்பகுதியில் சுற்றுலா மற்றும் மலையேற்றப் பயணங்களுக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.