நேபாள வெள்ளம்: 108 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு!

 
நேபாள் மீட்பு இந்தியர்கள் விமானம்

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 108 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாள வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 108 இந்தியக் குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னதாகத் தொடர்பில்லாமல் இருந்த சுமார் 50 பேருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேபாள்

இன்னும் 275 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியாத சூழல் நீடிப்பதால், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன.

சீனா எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சுமார் 900 இந்தியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அங்கிருந்து வெளியேறக் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.