நேபாளப் பெருவெள்ளம்.. உத்தரப் பிரதேச ஆற்றில் 13 உடல்கள் மீட்பு!
Aug 31, 2026, 07:15 IST
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைவு மற்றும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களில் மேலும் சில இந்திய எல்லைக்குள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக இந்திய எல்லைப் பகுதிக்குச் சடலங்கள் அடித்து வரப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கந்த ஆற்றில் நேற்று ஆகஸ்ட் 30ம் தேதி மேலும் 4 சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 4 நாட்களில் மீட்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் தீவிரமான மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
