நேபாள வெள்ளம்: 40 ஹெலிகாப்டர்களில் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்கள்!

 
நேபாள்

நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விரைந்து கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், மூன்று மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

நேபாள்

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ரசுவா உள்ளிட்ட பகுதிகளுக்கு அவசர நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, காத்மாண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 40 தனியார் ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.

இந்த ஹெலிகாப்டர்களின் மீட்புப் பயணங்கள் அனைத்தும் நேபாள ராணுவத்தின் நேரடி மேற்பார்வையில் ஒருங்கிணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவைப்பட்டால் உடனடியாகப் பயன்படுத்துவதற்காக விமான நிலையத்தில் கூடுதலாக 20 ஹெலிகாப்டர்கள் முழுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.