நேபாள பெருவெள்ளம்... பலி எண்ணிக்கை 962 ஆக உயர்வு !

 
நேபாளம்

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 962 ஆக அதிகரித்துள்ளது. தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, வெள்ளத்தில் சிக்கித் தப்பியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேபாளம்

முன்னதாக ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 4,500 ஆகக் குறைந்துள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை உடைவு மற்றும் தொடர் மழையால் உருவான இந்த பேராபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்களும், வெளிநாட்டு மீட்புக்குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளம்

குறிப்பாக திட்டப்பகுதிகளில் உள்ள சுரங்கங்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் சவாலான சூழலிலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.