நேபாள வெள்ளம்: எத்தனை பேரை மீட்டுள்ளோம்? - சட்டப்பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி!
Aug 27, 2026, 12:10 IST
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்துத் தமிழகச் சட்டப்பேரவையில் இன்று கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசுக்குச் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

நேபாளத்தில் நிகழ்ந்த கோர வெள்ளத்தில் 40-க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், இதுவரை எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அவர் விளக்கம் கேட்டார். பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்கவும், நிலைமையைக் கண்காணிக்கவும் அரசு தரப்பில் அதிகாரிகள் யாரேனும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளார்களா என்ற விவரங்களைக் கோரினார்.

நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
