நேபாள வெள்ளப்பெருக்கு.. அமெரிக்கா அனைத்து உதவிகளையும் வழங்கும் என அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

 
நேபாள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கோரமான காட்டாற்று வெள்ளப் பேரழிவைச் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

நேபாள்

நேபாளத்தில் பனிச்சரிவு காரணமாக லெண்டே கோலா ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம், சுமார் 30 அடி உயரத்தில் பாறைகள் மற்றும் மண்ணுடன் சேர்ந்து ரசுவா, தாடிங் உள்ளிட்ட மாவட்டங்களை நிர்மூலமாக்கியுள்ளது. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் தீக்குச்சிகளைப் போல அடித்துச் செல்லப்பட்டன.

நேபாள காவல் துறையின் அறிக்கையின்படி, இதுவரை 547 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 1,473 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேபாள்

இது வெறும் வெள்ளம் மட்டுமல்ல, சேறும் நீரும் கலந்த ஒரு கொடூரமான பேரழிவு என்று வர்ணித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், நேபாளத் தலைவர்களைத் தொடர்புகொண்டு அவசியமான அனைத்து நிவாரண உதவிகளையும் உடனடியாக வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.