நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற கும்பகோணத்தை சேர்ந்த 36 தமிழர்கள் மாயம்!
Updated: Aug 30, 2026, 10:45 IST
நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த 57 பேரில் 36 பேரின் நிலை என்னவென்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

அவர்களை அழைத்துச் சென்ற டிராவல்ஸ் ஏஜென்சி உரிமையாளர் முகமது உசேன் அனுப்பி வைத்த பயணிகளைத் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, சுற்றுலா சென்றவர்களில் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மாயமானவர்களை உடனடியாக மீட்கவும், அவர்களின் தற்போதைய நிலையை அறியவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
