நேபாள பெருவெள்ளம்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 734 ஆக உயர்வு !
Aug 30, 2026, 11:10 IST
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

நுவாகோட், சித்வான் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, நேபாள வெள்ளத்தில் சிக்கிய 108 இந்தியர்கள் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
