16 பனிப்பாறை ஏரிகளில் சென்சார் பொருத்தம்... நேபாளம் வெள்ளப்பெருக்கு எதிரொலி!

 
nepal

 

திபெத்தின் இமயமலைப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டதன் காரணமாகப் போடே கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு உண்டானது. இந்த வெள்ளம் நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களைத் தாக்கிப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பாறைகள், மண் மற்றும் சேறு சகதிகளுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Sikkim is monitoring 16 glacial lakes with sensors — Can they stop the next GLOF??

நேபாளத்தில் இரண்டாவது வாரமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 4,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேறு சகதிகள் நிறைந்த பகுதிகளில் இருந்தும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இடங்களிலிருந்தும் நேபாள ராணுவத்தினர் படகுகளில் சென்று உடல்களை மீட்டு வருகின்றனர்.

China-Nepal glacial flood alert system warned of seven disasters – but missed this one - The Economic Times

இதற்கிடையே, நேபாளத்தில் பனிப்பாறை வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் அதிக ஆபத்துள்ள 16 பனிப்பாறை ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சிக்கிம் மாநிலத்தில் பெரியது மற்றும் சிறியது என 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ள நிலையில், 13 ஏரிகள் வடக்கு சிக்கிமிலும் 3 ஏரிகள் மேற்கு சிக்கிமிலும் அதிக ஆபத்துள்ளவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்க பெரும்பாலான ஆபத்தான ஏரிகளில் சென்சார்கள் பொருத்தப்படுவதோடு, தானியங்கி வானிலை நிலையங்களும் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.