காசா போர் எதிர்ப்பு: நெதர்லாந்தில் திரண்ட 2 லட்சம் பேர் – இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணி!

 
காசா

 

காசா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற இந்தப் பேரணிக்கு ‘ரெட் லைன்’ (Red Line) எனப் பெயரிடப்பட்டது. இதில் பங்கேற்ற பலர் சிவப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வலியுறுத்தல்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும், அந்நாட்டுக்கு எதிராகக் கடுமையான வர்த்தகத் தடைகளை விதிக்க வேண்டும், காசா விவகாரத்தில் நெதர்லாந்து அரசு இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட 13 அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன. இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகப் போராட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்புகள் தெரிவித்தன.

More than 200,000 people have marched in Amsterdam demanding government action against Israel's genocidal war on Gaza, according to organisers Amnesty International Netherlands. 📸

இஸ்ரேல் விவகாரத்தில் நெதர்லாந்து அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராட்டக்காரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கிடையே, காசா மக்களின் துயரத்தைக் குறைக்கவும், இஸ்ரேல் மீது அரசியல் மற்றும் தூதரக ரீதியான அழுத்தம் கொடுக்கவும் தங்கள் அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாக நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் தெரிவித்துள்ளார்.