பெற்ற தாய் என்றும் பாராமல்.. விரட்டி விரட்டி தாக்கும் கொடூர மகன்.. பகீர் வீடியோ வைரல்!
![துர்கேஷ் சர்மா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/06304fc3af720bc6259561a1c5f97df5.jpg)
பொது இடத்தில் தாயை அவரது மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோவில், ஒரு சிறுவன் குச்சியை ஏந்திக்கொண்டு, தனது தாயுடன் கோவிலை சுற்றி வருகிறார்.
बुलन्दशहर : कलयुगी बेटे ने विधवा मां को पीटा
— News1Indiatweet (@News1IndiaTweet) April 2, 2024
मंदिर के सामने मां को डंडे से पीटा
बेटे की पीटाई के डर से दौड़ती रही बुजुर्ग मां
बेरहम बेटे को नहीं आया बुजुर्ग मां पर रहम
आरोपी को भीड़ ने पकड़कर पुलिस को सौंपा
पुलिस ने वायरल वीडियो को देखा
कलयुगी बेटे के खिलाफ दर्ज की एफआईआर… pic.twitter.com/oIRAYZtFrx
அப்போது மகனிடமிருந்து தப்பிக்க அலறியடித்தபடி கோயிலை சுற்றி ஓடுகிறார் தாய். ஆனால், மகன் அவரை விரட்டி ஓடுகிறார். இறுதியில் கோவிலுக்கு முன்பாக நின்றிருந்த தாயாரை இளைஞன் கொடூரமாக தாக்குகிறான். இறுதியில் அந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தாக்குதல் நடத்தியவரின் தாய் பாபி என்றும், தாக்கியவர் அவரது மகன் துர்கேஷ் சர்மா என்றும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
போலீசார் துர்கேஷ் சர்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தாயை தாக்கிய மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்று நடக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!