ரூ.1,000 புதிய நோட்டு மீண்டும் வருகிறதா? மத்திய அரசு விளக்கம்!

 
1000

 

இந்தியாவில் ரூ.1,000 மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. மஞ்சள் நிறத்தில் கோயில் படம் இடம்பெற்றதாகக் கூறப்படும் நோட்டின் புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தத் தகவல் போலியானது என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.  

ரூ.1,000 நோட்டு குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு இல்லை

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), புதிய ரூ.1,000 நோட்டுகளை வெளியிடுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று PIB தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்களையும் தகவல்களையும் உண்மை என நம்பவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது எந்தெந்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன?

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. பின்னர் புதிய வடிவிலான ரூ.500 நோட்டும், ரூ.2,000 நோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

Will Rs 1,000 Notes Be Back Soon? RBI Clarifies | Business News - News18

தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. புதிய ரூபாய் நோட்டுகள் தொடர்பான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்.