சென்னை சென்டிரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதிய ஏ.சி. மின்சார ரயில்!

 
சென்டிரல்  அரக்கோணம் ஏ.சி. மின்சார ரயில்

சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சென்னை சென்டிரல் - அரக்கோணம் மார்க்கத்தில் புதிய குளிர்சாதன வசதி கொண்ட (ஏ.சி.) மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது.

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய ஏ.சி. மின்சார ரயில் தற்போது தெற்கு ரயில்வேயிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏசி மின்சார ரயில்

சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம் வரை செல்லும் இந்த ரயில், ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக இயக்கப்பட உள்ளது.

ஏ.சி. மின்சார ரயில்

அலுவலக நேரங்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்பச் சேவைக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு தற்போது ரயில்வே நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.