வீடியோ!! வராண்டாவில் கர்ப்பிணி தாய்க்கு சிகிச்சை!!அரசு மருத்துவமனை அவலங்கள்!!

 
vilupuram

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் வளாகத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகின்றது. அங்கு கர்ப்பிணி பெண்களும் தாய்மார்களும் வந்து செல்கின்றனர்.


இந்த நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை அன்று வாகம் கிராமத்தில் இருந்து ராதிகா என்பவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தையின் கைவிரல் இடுக்குகளில் சதை வளர்ச்சி இருந்துள்ளதால் குழந்தைக்கு மேல் சிகிச்சை அளிக்க இன்று தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்று 3 நாட்களே ஆன தாய் ராதிகா நடைபாதையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது தாயிடம் பால் குடிப்பதற்காக குழந்தையும் வராண்டாவிலே கிடத்தப்பட்டுள்ளது. எந்த அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் தாய் மற்றும் குழந்தை இருவரும் வராண்டாவில் இருக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

vilupuram

மேலும் இது தொடர்பாக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவர் (RMO) ரவிக்குமாரியிடம் கேட்டபோது இந்த தகவல் குறித்து தனது கவனத்திற்கு வரவில்லை என்று கூறினார். பொதுவாக சிகிச்சை பெரும் தாய்மார்களின் தீவிர தன்மையை பொறுத்து  படுக்கை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என கூறினார்.


மேலும் இந்த சம்பவம் படுக்கை பற்றாக்குறையால் ஏற்பட்டு இருக்கலாம் உடனடியாக மகப்பெறு நிர்வாகிகளிடம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பேசு பொருளானது. தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அவர்களுக்கு தனி படுக்கை அறை வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web